லாலாப்பேட்டை டிச. 25: லாலாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள புற்கள், செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை வழியாக கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 81 செல்கிறது. இந்த சாலையானது நாகப்பட்டினத்திலிருந்து கொச்சி வரை செல்லும் சாலையாகும், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், கோவை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் உள்ளது.
லாலாப்பேட்டை அருகே கே.பேட்டை முதல் மகாதானபுரம் வரை சாலையோரத்தில் புற்கள், செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்போல் கிடந்தன. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள், கே.பேட்டை முதல் லாலாப்பேட்டை வரை சாலையோரம் உள்ள முட்புதர்களை இயந்திரம் மூலம் அகற்றினர்.
