×

அரவக்குறிச்சியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது

அரவக்குறிச்சி, டிச. 25: அரவக்குறிச்சியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை வெள்ளைத்தாளில் எழுதி வைத்து விற்று கொண்டிருந்த அரவக்குறிச்சி மேற்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் (50) மற்றும் அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (52) ஆகிய இருவரையும் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1000 மதிப்புள்ள 9 லாட்டரி டிக்கெட்டுகளை அரவக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Aravakurichi ,Aravakurichi… ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியூ சாலை மறியல்