×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மாநில உரிமைகளை மீறும் யுஜிசி வரைவு விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்

புதுடெல்லி: மக்களவையில் சேலம் எம்.பி. செல்வகணபதி கூறுகையில்,’ பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் வரைவு விதிமுறைகள், மாநில அரசுகளின் உரிமைகளை முழுமையாக மீறுவதாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.
மடைமாற்றுகிற பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில்,‘‘ பெரு நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி, சாமானிய மக்களின் வரியை பெரு முதலாளிகளுக்கு மடைமாற்றி விடுவதால் இது நீதியை அநீதியாக மடைமாற்றுகிற பட்ஜெட்.
பெண்களுக்கு பணியிட பாதுகாப்பு: தர்மபுரி எம்.பி அ. மணி கூறுகையில்,’ அன்றாடம் கூலி பெறும் பெண்களுக்கு ஊதிய ஏற்றத்தாழ்வுகளை தடுக்கவும் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இஎஸ்ஐ திட்டம்: கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி மலையரசன் பேசுகையில், ‘ இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதிகரித்து வரும் பயனாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் இஎஸ்ஐசி வசதிகளை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மாநில உரிமைகளை மீறும் யுஜிசி வரைவு விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Parliament Budget Session ,UGC ,New Delhi ,Salem ,Selvaganapathy ,Lok Sabha ,University Grants Commission ,Dinakaran ,
× RELATED இந்திரா காந்தி- மோடி வித்தியாசத்தை...