அம்பத்தூர்: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் செல்வராஜ் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணன் (43), அம்பத்தூரில் உள்ள பிரிண்டிங் பிரஸில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். மீண்டும் மாலை 4 மணிக்கு ஷாலினி வீடு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் 42,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. பிறகு தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேஷ் கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.
