- வியாசர்பாடி
- மாதவரம்
- இமான்
- 7வது குறுக்குத் தெரு, எம்கேபி நகர், வியாசர்பாடி, சென்னை
- சங்கீத
- பவித்ரா
- நித்ரா…
மாதவரம், டிச.22: சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இமான் (28). கார் கிளீனிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா (20) என்ற மனைவியும், பவித்ரா (4), நித்ரா (2) என்ற மகள்கள் உள்ளனர்.
கடந்த 3 மாதத்திற்கு முன், சங்கீதாவிற்கு மூன்றாவதாக ஸ்ரீஜனா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் குழந்தை ஸ்ரீஜனாவுக்கு சங்கீதா பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. சந்தேகமடைந்த சங்கீதா, குழந்தையை எழுப்பிய போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் உடனடியாக குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பால் கொடுத்தபோது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்ததா அல்லது குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என எம்கேபி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
