×

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை, டிச.22: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு முக்கிய பகுதியாக செயல்படும் பஜார் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், சத்தியவேடு, நாகலாபுரம், புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தின் முன்பு ஒரு சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிலையத்திற்கு உள்ளே வராமல் பேருந்து நிலையத்தின் வெளியே நிற்கின்றன. இதனால், ஆந்திராவில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தின் வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

 

Tags : Uthukkottai ,Uthukkottai Panchayat ,Chennai ,Chengunram ,Thiruvallur ,Sathiyavedu ,Nagalapuram ,Puttur… ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...