- செங்கை கலெக்டர்
- செங்கல்பட்டு மாவட்டம்
- கலெக்டர்
- அருண்ராஜ்
- சமுத்திரபாண்டியன்
- காசிகா
- மேகநாதன்
- ஜெயந்தி
- தின மலர்
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக உள்ள அருண்ராஜ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார். இவருக்கும் மேகநாதன், ஜெயந்தி தம்பதியரின் மகள் மருத்துவர் கவுசிகாவுக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று காலை 6 மணிக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜிக்கும் கவுசிகாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து காலை உணவு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வழங்கப்படுகிறது. திருமண வரவேற்பு விழா வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
The post செங்கை கலெக்டருக்கு இன்று திருமணம் appeared first on Dinakaran.
