பெய்ரூட்: சிரியாவின் புதிய தலைவர்களை சந்திப்பதற்காக சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு குழு நேற்று டமாஸ்கஸ் வந்தது. சிரியாவின் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் வான்வழி தாக்குதல்களின் அச்சுறுத்தலை தடுப்பதற்காக சிரியா கடந்த 2013ம் ஆண்டு ரசாயன ஆயுதத் தடை அமைப்பில் இணைந்தது.
சிரியாவில் ஏறத்தாழ சுமார் 14 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரின்போது சிரியாவின் அதிபராக இருந்த பஷர் ஆசாத்தின் அரசானது மீண்டும் மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ரசாயன ஆயுத தடை அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆனால் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதை ஆசாத் மறுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் அதிபர் ஆசாத் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ரசாயன ஆயுத தடை அமைப்பின் அவசரக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து சிரியாவின் புதிய தலைவர்களை சந்திப்பதற்காக ரசாயன ஆயுத கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் நேற்று டமாஸ்கஸ் வந்தனர்.
The post சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்புக்குழு சிரியா வருகை appeared first on Dinakaran.
