×

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 13 வயதிற்குட்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்களே வன்ம செயலில் ஈடுபட்டது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.இந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

The post மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G.K. Vasan ,Chennai ,Tamil ,Maanya Congress ,President ,Krishnagiri Pochampally Government School ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...