×

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் இடமாற்றம்: ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: மாவட்ட நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: சென்னை உயர் நீதிமன்ற சட்ட பணிகள் குழுவின் செயலாளராக பணியாற்றி வந்த வி.ஆர்.லதா சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை சிறுவழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த டி.லிங்கேஷ்வரன் சொத்தாட்சியராகவும், இதுவரை சொத்தாட்சியராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி என்.ராமநாதன் சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய எஸ்.ஹெர்மிஸ் அத்தியாவசிய பொருள்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

The post மாவட்ட நீதிபதிகள் 4 பேர் இடமாற்றம்: ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,District Judges ,General ,High Court ,S. Alli ,V.R. Latha ,Madras High Court Legal Services Committee ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...