×

போபாலில் பிச்சை எடுக்க, கொடுக்க தடை

போபால்: மத்தியபிரதேசம் முழுவதும் சாலைகளில் பிச்சை எடுப்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்தியபிரதேசத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மத்தியபிரதேசத்தில், நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ம் முறையாக இடம்பெற்றுள்ள இந்தூர் நகரில் கடந்தாண்டு முதல் பிச்சை எடுப்பதும், பிச்சை தருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் போபாலிலும் தற்போது பிச்சை எடுக்க, கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போபால் மாவட்ட கலெக்டர் கவுஷ்லேந்திர விக்ரம் சிங் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் அவர்களுக்கு பிச்சை தருவதும் தடை செய்யப்படுகிறது. தடையை மீறி பிச்சை எடுப்பவர்கள், தருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

The post போபாலில் பிச்சை எடுக்க, கொடுக்க தடை appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Madhya Pradesh ,
× RELATED ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப்...