×

செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, நாய் பலி

செஞ்சி, பிப். 1: செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து இரண்டு கன்று குட்டிகள் மற்றும் நாய் உயிரிழந்தன. செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள சஞ்சீவி மலை அடிவாரத்தில் ஆத்மநாதர் சிவன் கோயில் மாடு வெட்டி அம்மன் கோயில் அருகே இரண்டு கன்று குட்டிகள் இறந்து கிடந்தன. அவ்வழியாக வந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோன்று நல்லான்பிள்ளைபெற்றால் நந்தன் கால்வாய் பகுதியில் ஒரு நாய் இறந்து கிடந்தது. 2 சம்பவங்கள் குறித்தும் வனத்துறைக்கு மற்றும் கால்நடை துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்துபோன கன்று குட்டியை ஆய்வு செய்தனர். அதில், காட்டு விலங்கு ஏதாவது கடித்து கன்றுக்குட்டி இறந்து இருக்கலாம், ஆனால் புலி இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், மர்ம விலங்கு குறித்து விசாரணை செய்து வருவதாகவும் செஞ்சி வனசரகர் பழனிவேல் தெரிவித்தார்.

The post செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, நாய் பலி appeared first on Dinakaran.

Tags : Senchi ,Sanjeevi hill ,Pakkam ,Amman ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு