- ரத சப்தமி பிரமோற்சவ விழா
- பஞ்ச மூர்த்திக் மாதவிடா
- வேதபுரிஸ்வரர் கோயில்
- ஜன
- ரத சப்தமி பிரமோற்சவ விழா
- சீயார்
- ரத சப்தமி பிரமோற்சவ விழா
- திருவண்ணாமலை மாவட்டம்
- பஞ்ச மூர்த்திக் மாதவாய் நடக்காதே
செய்யாறு, ஜன. 30: செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிவ வாத்தியங்கள், மங்கல இசையுடன் கொடியேற்றம் நடந்தது. அப்போது கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் கேடய உற்சவமும் நடைபெற்றது. இரவு சுவாமிகளுக்கு அபிஷேகமும், ஆராதனைகளை தொடர்ந்து கற்பக விருட்சம் காமதேனு, மயில், மூசீகம், ரிஷபம் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இன்று 30ம் தேதி காலை சூரிய பிரபை உற்சவமும், இரவு சந்திர பிரபை உற்சவமும், நாளை 31ம் தேதி 3வது நாள் விழாவில் பகல் அபிஷேகமும் இரவு அபிஷேகமும் பூத வாகன சேவையும் நடைபெறுகிறது.
The post ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பஞ்ச மூர்த்திகள் மாடவீதியில் உலா செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.
