- கார்த்திமேடு அரசு பள்ளி
- திருமுத்துராப்பூண்டி
- கதிமடு அரசு செகண்டரி பள்ளி
- திருதுரைபுண்டி, திருவாரூர் மாவட்டம்
- மு. சனி. பாலு
- காவியராசன்
திருத்துறைப்பூண்டி, ஜன. 29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் கவியரசன் வரவேற்றார், நிகழ்ச்சியில் திருவாரூர் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி பேராசிரியர் விஜயலெட்சுமி பேசும்போது: போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் எவ்வாறு பங்கு பெறுவது குறித்து விளக்கமளித்தார். மேலும் ஜே .இஇ, நீட் போன்ற உயர் கல்விக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்செய்து கொள்வது குறித்து விளக்கினார்.
அடுத்து மாணவர்கள் என்ன படிக்கலாம் எந்த துறையில் தங்களின் உயர் கல்வியை தொடரலாம் என்பதற்கு உதவும் வகையில் கையெடுகள் வழங்கப்பட்டன. மேலும் தொலைதூரக் கல்வி குறித்த விவரங்கள் கல்விக்கான உதவித்தொகையை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உயர் கல்வி பற்றிய மாணவ, மாணவிகளின் சந்தேக ங்களுக்கு பேராசிரியர் விஜ யலெட்சுமி விளக்கம் அளித்தார். நிறைவாக ஆசிரியை தனுஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ரேணுகா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் முகுந்தன், சந்திரசேகரன், மாலதி ஆகியோர் செய்திருந்தனர்.
The post கட்டிமேடு அரசு பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
