×

அலங்காநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குபேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் அபிதா வரவேற்றார்.

இந்த முகாமில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகள் மற்றும் பொது இடங்களில் எரிப்பதனால் ஏற்படும் தீமைகள் நோய் தொற்று பரவும் அபாயம் குறித்தும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் உணவு பொருட்கள் வாங்க செல்லும் பொழுது சில்வர் பாத்திரங்கள் எடுத்துச் சென்று சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் துப்புரவு மேற்பார்வையாளர் துரை நன்றி தெரிவித்தார்.

The post அலங்காநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : eradication awareness ,Alanganallur Town Panchayat ,Alanganallur ,Madurai district ,76th Republic Day ,Panchayat ,President ,Renuka Eswari Govindaraj ,Vice President ,Saminathan ,eradication awareness camp ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு