×

வளர்ச்சி திட்ட பணிகளை உதவி செயற்பொறியாளர் ஆய்வு பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில்

பெரணமல்லூர், ஜன.28: பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா நேற்று மாலை பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட காரிய மேடை மற்றும் அயோத்தி தாசர் பண்டிதர் நிதி உதவி திட்டத்தின் கீழ்பெரணமல்லூர் வடக்கு பகுதியில் சுமார் ₹10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை பார்வையிட்டு திட்ட பணிகள் தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்கும்படி உத்தரவிட்டார். ஆய்வின் போது, பேரூராட்சி தலைவர் வேணிஏழுமலை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜனனி, இளநிலைபொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை உதவியாளர் மகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post வளர்ச்சி திட்ட பணிகளை உதவி செயற்பொறியாளர் ஆய்வு பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Peranamallur Town Panchayat ,Peranamallur ,Assistant Executive ,Panchayats ,Amsa ,panchayat ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை...