ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 85 வயதுக்கு மேற்பட்ட 209 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 47 பேர் என 256 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி தொடங்கியது. 3 பேர் வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டனர். 7 பேர் தவிர்க்க முடியாத காரணத்தாம் வாக்கு செலுத்த முடியவில்லை. கடைசி வாக்குப்பதிவாக ஈரோடு மணல் மேடு பகுதியை சேர்ந்த 103 வயதான பெரியண்ணன் என்பவரிடம் தபால் வாக்குப்பதிவு செய்து, நிறைவு செய்யப்பட்டது. இதன்மூலம் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த 256 பேரில், 246 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு நிறைவு 246 பேர் வாக்களித்தனர் appeared first on Dinakaran.
