×

ரெட்டியார் சத்திரம் அருகே சாலையோர குப்பைகளால் தொற்று நோய் அபாயம்: விரைந்து அகற்ற கோரிக்கை

 

ரெட்டியார்சத்திரம், ஜன. 21: ரெட்டியார் சத்திரம் அருகே பிரதான சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் கொட்டப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு அப்பதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரெட்டியார் சத்திரம் அருகே சாலையோர குப்பைகளால் தொற்று நோய் அபாயம்: விரைந்து அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Redtiyar Chatram ,D.Pannapatti Panchayat ,Redtiyar Chatram Union ,Sempatti-Ottancharam road ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை