×

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் கூறுவதா? ஆளுநருக்கு காங். கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் ஆளுநர் ரவி கூறுகிறார். அது உண்மையில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டாரே, அப்போது இந்த ரவி எங்கே போயிருந்தார். மாட்டுக்கறியை வைத்திருந்த ஒரே காரணத்துக்காக இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே? அப்போது இந்த ரவி எங்கே போயிருந்தார். ஆளுநர் வேலையை ஒழுங்காகப் பார்க்கத் துப்பில்லை. இதில் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்க அலைகிறீர்களே. வெறும் ரவியாக உளறினால் கடந்து போகலாம், ஆளுநராக இருப்பதால் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

The post தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் கூறுவதா? ஆளுநருக்கு காங். கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Congress ,Ranjan Kumar ,Governor ,Ravi ,Uttar Pradesh ,Hathras ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...