திருப்புவனம், ஜன.14: திருபாச்சேத்தி சுங்கச்சாவடியில் மூன்று ஷிப்ட்களில் 56 பேர் பணிபுரிகின்றனர். கடந்தாண்டு தீபாவளியை யொட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டு முதல் தவணையாக ஐயாயிரம் வழங்கப்பட்டது. மீதி பணம் வழங்க வில்லை. பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வழங்காததால் நேற்று மாலை 5 மணி முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாலை 5 மணியில் இருந்தே வாகனங்கள் அனைத்தும் பாஸ்ட் டாக் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்றன.
The post டோல்கேட் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் appeared first on Dinakaran.
