×

பிளஸ் 1 மாணவன் ஏரியில் மூழ்கி பலி

கண்ணமங்கலம், ஜன.11: கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி பிளஸ் 1 மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கற்பகம்(42), கூலித்தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார்(15). இவர் அருகில் உள்ள அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அருகிலுள்ள வாழியூர் ஏரியில் எருமை மாட்டை குளிப்பாட்ட ஓட்டி சென்றுள்ளார். ஏரிக்கு சென்ற மகன் மதியமாகியும் வீடு திரும்பாததால், கற்பகம் ஏரிக்கு சென்று மகனை தேடியுள்ளார். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் ஏரியில் விழுந்திருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஏரியில் தேடி மாணவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பிளஸ் 1 மாணவன் ஏரியில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,1 ,Kanapagam ,Kalasamudram village ,Kannamalam ,Nandakumar ,Dinakaran ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...