×

விண்ணப்பங்கள் வரவேற்பு காரைக்காலில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா

 

காரைக்கால், ஜன.5: காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகன்டன் அறிவுறுத்தலின்படி வீரமங்கை வேலுநாச்சியார் 294 வது ஆண்டு பிறந்தநாள் விழாவினை மிஷன் சக்தி அமைப்பானது காரைக்கால் கேந்திரியா வித்தியாலயா பள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காரை மாவட்ட முதுநிலைகாவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா கலந்து கொண்டு தலைமையேற்று வீரமங்கை வேலுநாச்சியார் திருவருவப்படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன் வீரமாங்கை வேலுநாச்சியார் வரலாற்றுச் சிறப்புகளை மாணவ மாணவியருக்கு எடுத்துக் கூறினர்.தொடர்ந்து மிஷன் சக்தி ஒருங்கிணைப்பாளர் அருணியா மிஷன் சக்தி செயல்பாடுகள், குழந்தைகள் பாதுகாப்பு, இலவச உதவி எண்கள் 100,1098 181 112 பற்றியும் குழந்தைகள் நலக்குழுமத்தின் செயல்பாடுகள் பற்றியும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

The post விண்ணப்பங்கள் வரவேற்பு காரைக்காலில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Velunachiyar ,Karaikal ,Karaikal District Collector ,Manikandan ,Mission Shakti ,Veeramangai Velunachiyar ,Karaikal Kendriya Vidyalaya School ,Karaikal District… ,
× RELATED வேலுநாச்சியாரின் வீரத்தை வணங்கிடுவோம்: டிடிவி தினகரன் ட்விட்