×

நம்பர் ஒன் டோல்கேட் அருகே லாரியில் சென்ற பொக்லைன் நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது

 

சமயபுரம், ஜன.7: கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு பொக்லைன் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சமயபுரம் நம்பர் டோல்கேட் ஒய் ரோடு அருகே சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பொக்லைன் எந்திரம் நெடுஞ்சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மூலம் பொக்லைன் எந்திரத்தை மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் சிக்னல் பகுதியில் நடந்த இந்த விபத்து ஏற்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post நம்பர் ஒன் டோல்கேட் அருகே லாரியில் சென்ற பொக்லைன் நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : tollgate ,Samayapuram ,Coimbatore ,Trichy ,Karuppusamy ,Madurai ,one ,Samayapuram… ,Dinakaran ,
× RELATED ஆம்னி பஸ்கள் உட்பட 7 வாகனங்களில் ஏர்...