- கட்டிமேடு ஊராட்சி
- திருத்துறைப்பூண்டி
- திருவாரூர் மாவட்டம்
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- மாலினி ரவிச்சந்திரன்
- துணை ஜனாதிபதி
- பாக்கியராஜ்
திருதுறைப்பூண்டி, ஜன. 7: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில், ஊராட்சி பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாராட்டும் நன்றி அறிவிப்பு கூட்டமும் நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக செயலர் புவனேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கட்டிமேடு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் செல்வம், கணினி இயக்குபவர் தமிழ்செல்வி, கவிநிலா, சிவக்குமார், ஞானசேகரன், டாக்டர் ஆரிப் கலந்து கொண்டனர்.
The post கட்டிமேடு ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.