×

சம்பா பயிரில் இரைதேடும் பறவைகள் குறைதீர் கூட்டத்தில் 81 மனுக்கள் வருகை உடனடி தீர்வுக்கு உத்தரவு

 

திருவாரூர், ஜன. 7: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 281 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுகொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாரு தலைமை வகித்தார். இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 281 மனுக்களை அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனு வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் எஸ்.பி கருண்கரட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சம்பா பயிரில் இரைதேடும் பறவைகள் குறைதீர் கூட்டத்தில் 81 மனுக்கள் வருகை உடனடி தீர்வுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Saru ,Thiruvarur Collector ,Dinakaran ,
× RELATED கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு...