×

பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும்

 

தவளக்குப்பம், ஜன. 7: புதுச்சேரி பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு குறித்து வருகிற சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்புவிழா நேற்று காலை அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தயாரித்த நவதானிய பொருட்கள், மளிகை பொருட்கள், துணிகள், பொங்கலுக்கு தேவையான உணவு வகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் அங்காடி மையத்தை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆளுநர் உரைக்கு முன்பு தேசியகீதம் இசைக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டசபை கூட்டங்கள் நடைபெறும்போது முதலில் தேசிய கீதம் பிறகு அந்தந்த மாநிலத்தின் வாழ்த்து பாடல்கள் இசைக்கப்படுவது மரபு, ஆனால் தமிழகத்தில் அதனை ஏன் பின்பற்றவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் புதுச்சேரியில் முதலில் தேசிய கீதமும், பின்பு தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் புதுச்சேரியில் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து உங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, இது சம்பந்தமாக வருகின்ற சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் கூடவிருக்கும் சட்டமன்ற குழு கூட்டம் ஆட்சிமன்ற அலுவலகக் குழு கூடி முடிவு செய்து சட்டமன்ற கூட்டம் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருத்தனர்.

The post பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : BJP ,Thavalakuppam ,Puducherry ,Speaker ,Selvam ,Puducherry Ariyanguppam Block Development Office ,Dinakaran ,
× RELATED பெண்கள் பாதுகாப்பில் பாஜக நாடகம்:...