வடமதுரை, ஜன. 5: அய்யலூர் அருகேயுள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (52). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று வடமதுரை அருகேயுள்ள கோப்பம்பட்டி கிராமத்தில் கனகராஜ் என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநி வெட்டுவதற்கு ஏறி உள்ளார். அப்போது அந்த மரத்தில் உள்ள காய்ந்த மட்டையை அகற்ற முயன்றுள்ளார். அச்சமயம் காய்ந்த மட்டை எதிர்பாராத விதமாக அருகேயுள்ள மின் கம்பியில் பட்டு பொன்னுச்சாமியின் மீது மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தோட்ட உரிமையாளர் கனகராஜ் வடமதுரை போலீசுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வவிசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.
