×

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைப்பணி

தூத்துக்குடி,ஜன.5: தூத்துக்குடி சங்கரபேரி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வடிகால், சாலை, பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு சங்கரபேரி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிதாக தார் சாலை மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளையும், துணை கழிவுநீர் ஏற்றும் நிலையத்தையும் மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, இளநிலை பொறியாளர் ராஜேஷ்கண்ணா, ஆணையாளரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர் முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை திமுக பிரமுகர்கள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைப்பணி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Housing Board ,Thoothukudi ,Mayor ,Jagan Periyasamy ,Sankaraperi Housing Board ,Thoothukudi Corporation ,Dinakaran ,
× RELATED எதிர்காலத்திற்கு ஏற்ப செயல்படுவோம்...