- பிள்ளை அஜு கோயில்
- ஊட்டி
- பேபி எசு கோயில்
- ஊட்டி அப்பர் பஜார்
- புத்தாண்டு தினம்
- செயின்ட் சுசைபூர் உயர்நிலைப்பள்ளி
- ஊட்டி
- பேபி ஏசு
ஊட்டி, ஜன. 7: ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் உள்ள குழந்தை ஏசு ஆலயத்தின் 81வது ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று மாலை புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் பெரியநாயகம் கொடியேற்றி ஆண்டு விழாவை துவக்கி வைத்தார்.
2, 3 ஆகிய தேதிகளில் மாலை சிறப்பு நவநாள் மறையுரை மற்றும் திருப்பலி கேத்தி சாந்தூர் புனித மிக்கேல் ஆலயத்தின் பங்கு குரு ஜெரோம் தலைமையில் நடைபெற்றது. 5ம் தேதி காலை 10.30 மணிக்கு மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆயரின் செயலர் அந்தோணிராஜ், உதவி பங்கு குரு டிக்சன், பங்கு குரு செல்வநாதன் இணைந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றினார்கள். அதன் பின் அன்பின் விருந்து நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஷிஜோ தலைமையில் மலையாளத்தில் திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்று பின் குழந்தை ஏசு சுரூபம் தாங்கின ஆடம்பர தேர் பவனி அப்பர் பஜார் வழியாக சென்று ஐந்தலாந்தர், மெயின் பஜார் வில்லோபண்ட் வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.
The post ஊட்டியில் குழந்தை ஏசு ஆலய ஆண்டு விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.