×

வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

 

சீர்காழி, ஜன. 7: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கதிராமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, பெருமங்கலம், சேத்தூர், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.

சீர்காழி அருகே ஆச்சாள்புரம், அரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புத்தூர், சீயாளம், கண்ணங்குளம், குமிலங்காடு, தண்டேசநல்லூர், துளசேந்திரபுரம், மாதிர வேலூர், சோதியகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.

The post வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vaitheeswaran Koil ,Achalpuram ,Sirkazhi ,Vaitheeswaran Koil substation ,Kathiramangalam ,Thiruppunkur ,Kanyakudi ,Perumangalam ,Sethur ,
× RELATED கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம்