×

கதிரவன் உதயமாகும் ரம்மியமான காட்சி மாவட்டம் விராலிமலை அருகே கள்ளசந்தையில் மதுவிற்ற 2 பேர் கைது

 

விராலிமலை, ஜன.7: விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்ற இருவரை விராலிமலை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் விராலிமலை அடுத்துள்ள செட்டியபட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெருமாள்(48), மற்றும் துரைராஜ் (50) ஆகியோர் அவர்களது வீட்டின் அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 55 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கதிரவன் உதயமாகும் ரம்மியமான காட்சி மாவட்டம் விராலிமலை அருகே கள்ளசந்தையில் மதுவிற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viralimalai, Kathrawan Udayagam Rammiyana Katasi District ,Viralimalai ,Pudukkottai district ,Kathravan Udayagam Rammiyana Ghadchi District ,
× RELATED சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்து...