×

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 392 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

 

திருப்பூர், ஜன.7: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 392 மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் (திருப்பூர்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மகாராஜ், (தேர்தல்) ஜெயராமன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஸ்பாதேவி, துணை கலெக்டா்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 392 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Grievance Redressal Day ,Tiruppur ,Farmers Grievance Redressal Day ,Tiruppur District ,Collector ,Christhuraj ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்