- மன்மோகன்
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- மன்மோகன் சிங்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- EVKS
- இளங்கோவன்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரும் 7ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மறைந்த தலைவர்களின் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார். இதில் தி.க. தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்துகிறார்கள்.அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி பங்கேற்கின்றனர். இதில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறேன்.
The post மன்மோகன்சிங் பட திறப்பு விழா; செல்வப்பெருந்தகை அழைப்பு appeared first on Dinakaran.