சென்னை: நான் இலாகா சம்பந்தமாக, டெல்லிக்கு போய்விட்டு வருகிறேன். ஈடி ரெய்டுக்கும் என் பயணத்திற்கும் சம்பந்தமில்லை. நீங்கள் கற்பனையாக எழுதுகிற கதைகளுக்கெல்லாம், நான் ஆள் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார்.
அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது இலாகா சம்பந்தமாக, நான் டெல்லிக்கு சென்று விட்டு வந்துள்ளேன். நீங்கள் கற்பனையாக எழுதுகிற கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. ஈடி ரெய்டுக்கும் என் டெல்லி பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை. ரெய்டுகள் எல்லாம் எங்களுக்கு பழக்கமான ஒன்றுதான். அது ஒன்றும் புதிது இல்லை. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
The post ஈடி ரெய்டுக்கும் என் டெல்லி பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.