×

காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறிருப்பதாவது: மொத்தம் 1,19,402 இடங்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளின் பதவிக்கலாம் 2025 ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பஞ்சாயத்துகளை நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் தொகுதி வளர்ச்சி அலுவலர் கிராம பஞ்சாயத்துகளின் சிறப்பு அதிகாரிகளாக நிமிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணையின் உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் பஞ்சாயத்து யூனியன்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுகிறார்கள். 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED திருத்தணி பகுதியில் கல்குவாரிகளில் டிரோன் சர்வே