×

மன்மோகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் படத் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; ஜன. 7ல் நடக்கிறது

சென்னை: மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன்சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது முழு உருவபடங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் வரும் 7ம்தேதி காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரது மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வரும் 7ம்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் அவர்களது முழு உருவ படத் திறப்பு விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகிக்கிறார்.

இந்த விழாவில், மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்ேகாவன் ஆகியோரது முழு உருவபடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post மன்மோகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் படத் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; ஜன. 7ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Manmohan ,EVKS ,Ilangovan ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Congress ,Manmohan Singh ,Kamaraj Arang ,Tamil Nadu Congress ,Selvapperundhagai ,Former ,Manmohan Singh… ,Dinakaran ,
× RELATED மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன்...