×

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் டாக்டர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனயய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் முன்னேற்றங்கள் எனக்கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி பிரசுரித்து வருகின்றன. திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எனினும் இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வு குழுவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும். இவ்வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஊடகங்கள், தனிநபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன் விசாரணையின் நம்பகத் தன்மையையும் பாதிக்கக் கூடும். இவ்வாறு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: டிஜிபி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,DGP ,Chennai ,Tamil Nadu Police ,Tamil Nadu DGP ,Madras High Court ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...