×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: தேசிய தகவல் மையம்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், “இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். எவ்வாறு வெளியானது?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், “முதல் தகவல் அறிக்கை காவல்துறை சார்பில் வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் தான் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அது முடக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது. அதில்,”தேசிய தகவல் மையத்தில் எஃப்ஐஆர்-ஐ பார்வையிடும் வசதி குறிப்பிட்ட சில பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் போது தானாகவே பிளாக் செய்யப்படும். குறிப்பாக 64, 67,68,70, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் எஃப்ஐஆர்-ஐ பார்க்கும் வசதி எஸ்சிஆர்பி கொடுத்த வழிகாட்டுதலின்படி முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, எஃப்ஐஆர்-ஐ ஐபிசி-யில் ( இண்டியன் பீனல் கோட் ) இருந்து பிஎன்எஸ் ( பாரதீய நியான சன்ஹிதா) குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம். பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எஃப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய எஸ்சிஆர்பி குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: தேசிய தகவல் மையம் appeared first on Dinakaran.

Tags : Anna University. ,National Information Center ,Chennai ,Anna University ,KINDI, CHENNAI ,Anna University. F. ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...