×

சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிப்பு: புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்ததால் சலசலப்பு

சென்னை: சென்னையில் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக காட்சியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைவரும் எழுந்து நின்ற உடன் தமிழ்தாய் வாழ்த்து பாடலான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் பாடப்பட்டது.

தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக வேறுபாடல் பாடப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. நிகழ்ச்சியில் ஒளிக்கப்பட்ட பாரதிதாசன் பாடல் புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் உள்ள தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சீமான் மட்டும் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிப்பு: புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்ததால் சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : SEEMAN ,Chennai ,Seaman ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி...