×

பகலிலும் பனிபொழியுடன் சம்பா பயிர் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைரமுடி அலங்காரத்தில் பெருமாள் சேவை

மன்னார்குடி, ஜன. 4: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணத்தலமும், தென்னகத்து தெட்சிண துவாரகை என்று அழைக்கப்படும் ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 31ம் தேதி துவங்கியது.

அதனைத் தொட ர்ந்து பகல் பத்து நிகழ்ச்சிகள் கடந்த சிலா நாட்களாக நடந்து வருகிறது. பகல்பத்து 4ம் நாளான நேற்று மாலை வைரமுடி சேவை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் தலைமையில் உபயதாரர்கள், தீட்சிதர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வரும் 10ம் தேதி அதிகாலை நடை பெறுகிறது.

The post பகலிலும் பனிபொழியுடன் சம்பா பயிர் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைரமுடி அலங்காரத்தில் பெருமாள் சேவை appeared first on Dinakaran.

Tags : Mannargudi Rajagopala Swamy Temple ,Mannargudi ,Vaikuntha Ekadashi festival ,Rajagopala Swamy Temple ,Vaishnav ,Mannargudi, Tiruvarur district ,Dakshina ,Dwaraka ,South ,
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்...