- கோயம்புத்தூர்
- கோவை ஒண்டிப்புதூர்
- சிங்காநல்லூர் மின்சார வாரியம்
- நிர்வாக பொறியாளர்
- பழனிசாமி
- ஒண்டிப்புதூர்
- கோவை மாநகர மின்சார வாரியம்
- தின மலர்
கோவை, ஜன.7: கோவை ஒண்டிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒண்டிப்புதூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (8ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மின் விநியோகம் சம்பந்தப்பட்ட தங்களது குறைகளை முறையிட்டு தீர்வு காணலாம். இவ்வாறு அறிக்கையில் செயற்பொறியாளர் பழனிச்சாமி கூறி உள்ளார்.
The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது appeared first on Dinakaran.