×

அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்ய 7-ம் தேதி சிறப்பு முகாம்

அரியலூர், ஜன. 4: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு :
சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளின் விவரம் 1.விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித்தொகை 2.இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3.ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4.கல்வி உதவித்தொகை 5.திருமண உதவித்தொகை 6.மகப்பேறு உதவித்தொகை 7. மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல் 8.முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி சீர்மரபினர் நலவாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்த்திட ஜனவரி 7 அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான தகுதிகள்: 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் 2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருத்தல்வேண்டும். (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) 4. குடும்பத்தில் ஒருநபர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முகாமிற்கு எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்: 1) ஆதார் அட்டை நகல் 2) குடும்ப அட்டை நகல் 3) சாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுசான்றிதழ். மேற்படி இந்நலவாரியத்தில் தகுதியுடைய நபர்கள் மேற்படி நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்ய 7-ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Seermapinar Welfare Board ,Ariyalur district ,Ariyalur ,District ,Collector ,Rathinasamy ,Dinakaran ,
× RELATED கல்குறிச்சியில் சீர்மரபினர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்