×

கல்குறிச்சியில் சீர்மரபினர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

காரியாபட்டி, டிச.30: காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் சீர்மரபினர் நலவாரியம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்றது. பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

தமிழக அரசு சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் ராசா அருள்மொழி முகாமினை தொடங்கி வைத்தார். நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி கண்சிகிச்சை, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்தில் மரணம் போன்றவற்றிற்கு உதவி தொகை வழங்கப்படும். முகாமில் ஏராளமானோர் உறுப்பினர்களாக நலவாரியத்தில் சேர்க்கப்பட்டனர்.

The post கல்குறிச்சியில் சீர்மரபினர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Seermapinar Welfare Board ,Kalkurichi ,Kariyapatti ,Tamil Nadu government ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர்...