×

கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி

 

ஈரோடு, ஜன.3: ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வரும் 9-ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில் வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியானது வரும் 9ம் தேதி முதல் துவங்கி பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Aari ,Canara Bank Rural Self-Employment Training Centre ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!!