ஈரோடு,ஜன.6: ஈரோட்டில் குளிர்கால ஆடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக்ததில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்(பனி) காலமாகும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது.குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி எங்கு பார்த்தாலும் பனி மூட்டமாக காட்சியளிப்பதால்,எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றனர். கடும் பனிப்பொழிவை சமாளிக்க பொதுமக்கள் ஸ்வட்டர்,கம்பளி போர்வை,ஸ்கார்ப், குல்லா உள்ளிட்டவைகளை தேடி போய் வாங்கி வருகின்றனர். இதில், ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள குளிர்கால ஆடைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
The post குளிர்கால ஆடைகள் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.