×

அரசு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக புகார்: சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

ஈரோடு, ஜன. 7: ஈரோட்டில் அரசு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டிய சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அந்த இயக்கம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பின்புறம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த மரங்களை சட்ட விரோதமாக வெட்டி அகற்றி விட்டு, ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ் என்ற பிரம்மாண்டமாக இரும்பு பைப்புகளை சி.எஸ்.ஐ நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது.

ஏற்கனவே இதுபோன்று மரம் வெட்டிய புகாரின் அடிப்படையில், சி.எஸ்.ஐ நிர்வாகத்துக்கு, ரூ.35,787யை, வருவாய் கோட்டாட்சியர் அபராதமாக விதித்தார். அந்த பணத்தையும் இதுவரை சி.எஸ்.ஐ நிர்வாகம் கட்டியதாக தெரியவில்லை.மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சட்ட விரோத செயல்களை செய்து வரும் சி.எஸ்.ஐ நிர்வாகம் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு,வெட்டிய மரத்துக்குண்டான அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post அரசு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக புகார்: சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CSI administration ,Erode ,Periya Mariamman Temple Land Recovery Movement ,District Collector’s Office ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!!