×

சாக்கடையில் இருந்து பெண் சடலம் மீட்பு

 

ஈரோடு, ஜன. 8: ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ளது அகில்மேடு 7வது வீதி. இந்த வீதியில் உள்ள சாக்கடையில் நேற்று காலை ஒரு பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீஸ் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் சாந்தி (57). நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், புதுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். இவர், கடந்த சில வருடங்களாக ஈரோடு பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளார் என்பதும், இந்நிலையில், அவர் சாக்கடையில் விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சாக்கடையில் இருந்து பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Akhilmedu 7th Street ,Erode Bus Stand ,Erode Town Police Station ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!!