- ரபி
- பெருந்துறை
- ஈரோடு
- கிராம வேளாண்மை மேம்பாட்டுக்
- பொன்முடி
- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
- கலைஞர்
- பெருந்துறை தாலுகா
ஈரோடு, ஜன. 6: பெருந்துறை அருகே விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி முகாம் நடைபெற்றது. பெருந்துறை தாலுகாவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான பொன்முடியில் அமைக்கப்பட்ட கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் பிரசாத் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
இதில், உதவி இயக்குநர் பேசுகையில், கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைத்ததன் நோக்கம், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர் ஆதாரங்களை பெருக்குதல் மற்றும் சூரிய மின்சக்தியின் மூலம் பம்புசெட்டுகள் அமைத்தல் மற்றும் வேளாண் இடுபொருட்களின் மானிய விபரங்களையும்,நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தம் முறை குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்தார்.
தோட்டக்கலை வேளாண்மை அலுவலர் ஜீவிதா, உதவி செயற்பொறியாளர் நவின் ஆகியோர் பங்கேற்று, தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், அவற்றை செயல்படுத்தும் முறை பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இயற்கை விவசாயி கணேசன் பங்கேற்று பேசுகையில்: பூச்சி விரட்டி,பஞ்சகாவியம் தயாரித்தல் பற்றியும் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கோகிலா பங்கேற்று பேசுகையில், பிஎம் கிசான் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.
The post பெருந்துறையில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி முகாம் appeared first on Dinakaran.