×

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

 

ஈரோடு, ஜன. 8: அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட வெங்கடாசலம் வீதியில் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்களாக பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளரான கணேசன் (50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 847 கிராம் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, பங்களாபுதூர் போலீசார், அண்ணா நகர் அரசு பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த அதேபகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (44) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 275 கிராம் எடையிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருள் விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Town ,Venkatachalam Road ,Dinakaran ,
× RELATED சாக்கடையில் இருந்து பெண் சடலம் மீட்பு