×

இன்று 2வது டெஸ்ட் துவக்கம் ஜிம்பாப்வே-ஆப்கன் அணிகள் மோதல்

புலவாயோ: ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் இரு அணிகளில் இருந்தும் தலா 3 வீரர்கள் அதிரடியாக சதம் விளாசினர். ஆப்கன் வீரர்கள் 2 பேர் இரட்டைச் சதம் விளாசினர். முதல் போட்டியில் இரு அணிகளும் முதல் முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோரை சேர்த்து சாதனை படைத்தன.

இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் புலவயோ நகரில் இன்று தொடங்குகிறது. இரு அணிகளின் பந்துவீச்சும் முதல் டெஸ்ட்டில் பலனளிக்காததால் இரு அணிகளும் இமாலய ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனவே பந்து வீச்சில் எந்த அணியின் கை ஓங்குகிறதோ அந்த அணி இந்த டெஸ்ட்டை வெல்வதுடன் தொடரையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இன்று 2வது டெஸ்ட் துவக்கம் ஜிம்பாப்வே-ஆப்கன் அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Afghanistan ,Bulawayo ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வேயுடன் 2வது டெஸ்ட் ஆப்கன் அபார வெற்றி